முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2025      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

Source: provided

டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மத்திய பா.ஜ.க. அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்த மாதம் இதுகுறித்த ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராகுல் நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டது, சேர்க்கப்பட்டது குறித்த மேலும் ஆதாரங்களைக் காட்டினார்.

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் 6,000-க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதே தவிர, ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.ராகுல் காந்தி பேசுகையில், வெறும் 36 நொடிகளில் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

இந்நிலையில் ராகுல், தான் பேசிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்து அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெறும் 36 நொடிகளில் 2 வாக்காளர்களை நீக்கிவிட்டு பிறகு மீண்டும் தூங்கச் செல்கிறார்கள். தேர்தல்களைக் கண்காணிக்கும் அதிகாரி விழித்திருந்து இந்த திருட்டைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார், திருடர்களைப் பாதுகாக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து