Idhayam Matrimony

பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2025      தமிழகம்
vija7y

சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக நடத்திய விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை - நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபவது வழக்கம். இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அந்த இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தது மதுராந்தகத்தை சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. இவர் விஜய் வீட்டின் பின் பக்கம் உள்ள சிறிய கேட் வழியாக பாதுகாவலர்கள் இல்லாத நேரத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பே உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது. விஜயை பார்க்க இரவு முழுவதும் மாடியின் மீது உணவின்றி பதுங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.  

விஜய்யை பார்த்ததும், அருண் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதும், அவரை தரைத்தளத்திற்கு அழைத்து வந்து பாதுகாவலர்களிடம் விஜய் ஒப்படைத்ததும் தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு விஜய் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. விஜய் வீட்டிற்குள் இளைஞர் சென்றது எப்படி? - விசாரணையில் புதிய தகவல் பாதுகாவலர்கள் இல்லாத நேரத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இளைஞர் உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து