இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      விளையாட்டு
England 2021 01 22

Source: provided

லண்டன் : இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9 வரையும், பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.

முதல் இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (கேப்டன்), ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஸாக் கிராவ்லி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் பட்லர் முதல் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். அதன்பின் நாடு திரும்புகிறார்.

இது தவிர ஜேம்ஸ் பிரேசி, மாசன் கிரேன், சகிப் முகமது, மேத்யூ பார்கின்சன், ஒல்லி ராபின்சன், அமர் விர்டி ஆகியோர் மாற்று வீரர்களகாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து