முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டம் வாபஸ் என 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இரண்டு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தில் \நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். 

தடுத்த போலீசார் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவானது. டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 பேரைக் கைது செய்துள்ளனர். ஆறு விவசாய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது சதி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் போராட்டம் திசை மாறியதால் முடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே டெல்லி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து உள்ளது. 

இது குறித்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் சர்தார் வி.எம்.சிங் கூறியதாவது;- 

வேறு யாரோ வழிநடத்துதலுடன் ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து செல்ல முடியாது. அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு இந்த போராட்டத்தில் இருந்து இப்போதே விலகிக் கொள்கிறது. 

எங்களுக்கு எம்.எஸ்.பி. உத்தரவாதம் கிடைக்கும் வரை எதிர்ப்பு தொடரும் ஆனால் எதிர்ப்பு வேறு வடிவத்தில் செல்லாது. மக்கள் உயிரை தியாகம் செய்யவோ அல்லது அடி வாங்கவோ நாங்கள் இங்கு வரவில்லை என கூறினார். 

சில்லா எல்லையில் உள்ள பாரதிய கிசான் யூனியனின் (பானு) தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங் கூறுகையில்  எங்கள் 58 நாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து