நடிகை சித்ரா மரணம் தற்கொலைதான் : நிபுணர் குழு அறிக்கையில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 2 பெப்ரவரி 2021      சினிமா
Chitra 2021 02 02

Source: provided

சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே என, நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி, தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், கணவர் ஹேம்நாத்தை கைது செய்தார். 

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை  வரும் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை  தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து