முக்கிய செய்திகள்

சிறுவயதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன்: அர்ஜுன் தெண்டுல்கர்

Arjun-2021-02-19

Source: provided

மும்பை : 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்றது. கடைசி வீரராக அர்ஜுன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் முன்னதாக வான்கடே மைதானத்தில் பந்து எடுத்து போடும் பையன். கடந்த சீசனில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளர். முதன்முறையாக அணியில் இணைந்துள்ளார். ஆட்டத் வெளிப்படுத்தும் நேரம் அர்ஜுன் எனதத் தெரிவித்துள்ளது. 

அர்ஜுன் தெண்டுல்கர் கூறுகையில் சிறுவயதில் இருந்தே நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன். பயிற்சியாளர்களுக்கும், சப்போர்ட் ஸ்டாப்களுக்கும் என்மீது நம்பிக்கை வைத்ததற்காக நன்றி சொல்லியாக வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய ஆர்வமாக உள்ளேன். ப்ளூ மற்றும் கோல்டு கலர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவதற்காக காத்திருக்க முடியாது என்றார். 

சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் ஹரியானா அணிக்கெதிரான முதன்முறையாக மும்பை அணிக்காக டி20 போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் தெண்டுல்கர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து