எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த போது வனத்துறை குறித்த அறிவிப்புக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கைத்தட்டலை கேட்டு வாங்கியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரை தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது.
இந்த நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நேற்று காலை மீண்டும் கூடியது. அப்போது துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவர் தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 10-வது முறையாகும். பட்ஜெட் உரையின் போது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை குறித்தும் அதற்கு ஒதுக்கியுள்ள நிதி விவரங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கைத்தட்டினார். மற்ற யாரும் கைத்தட்டவில்லை.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்தி விட்டு அனைவரையும் பார்த்து கைத்தட்டுங்களேன். பாவம் அண்ணன் மட்டும் கைதட்டிக் கொண்டிருக்கிறார் எனக்கூறி சிரித்தார். பின்னர் அனைவரும் கைதட்டினர். தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை வாசித்தார். பட்ஜெட் உரைக்கு இடையே துணை முதல்வரே கைதட்டுங்க அண்ணே என்று கேட்ட சம்பவம் சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |