எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி-20 ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது.
முதல் டி-20 ஆட்டத்தை நியூசிலாந்து அணி வென்ற நிலையில் 2-வது டி-20 ஆட்டம் டுனிடினில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் மார்டின் கப்தில், 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 53 ரன்களும் ஜேம்ஸ் நீஷம் 45 ரன்களும் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது. 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தபோது மிட்செல் சான்ட்னர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டாய்னிஸும் டேனியல் சாம்ஸும் அதிரடியாக விளையாடி நியூசிலாந்துக்கு கிலி ஏற்படுத்தினார்கள். சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து அசத்தினார்கள். கடைசி ஓவரில் ஆஸி. அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவை என்கிற நிலைமை உருவானது. அந்த ஓவரில் சாம்ஸ் 41 ரன்களிலும் ஸ்டாய்னிஸ் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். டி-20 வரலாற்றில் முதல்முறையாக 7-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து பழைய சாதனைகளை இருவரும் முறியடித்தார்கள். (இதற்கு முன்பு 2007-ல் இங்கிலாந்தின் கோலிங்வுட்டும் யார்டியும் 91 ரன்கள் சேர்த்ததே 7-வது விக்கெட்டுக்கான அதிக ரன்களாக இருந்தன.
கடைசியில் ஆஸி. அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 5 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டி-20 ஆட்டம் மார்ச் 3 அன்று நடைபெறவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


