இலங்கைக்கு எதிரான முதல் டி-20: ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய மே.இ.தீவுகள் வீரர் பொலார்ட் !

வியாழக்கிழமை, 4 மார்ச் 2021      விளையாட்டு
Pollard-2021-03-04

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய மே.இ.தீவுகள் வீரர் பொலார்ட், இந்தியாவின் யுவ்ராஜ் சிங் படைத்த சாதனையை சமன் செய்தார்.

கூலிட்ஜில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரன் பொலார்ட் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடிக்க இலங்கை அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் 3 ஓவர்களில் சிம்மன்ஸ், லூயிஸ் அதிரடியில் 48 ரன்கள் பிறகு ஒரே ஓவரில் ஹாட்ரிக் கைப்பற்றினார் தனஞ்ஜயா. கெய்லையும் டக்கில் எடுத்தார். பிறகு பொலார்ட், ஃபேபியன் ஆலன் அடுத்தடுத்த பந்துகளில் அவுட், கடைசியில் ஜேசன் ஹோல்டர் விளாச வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மே.இ.தீவுகள் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் 13.1 ஓவர்களில் 134/6 என்று வெற்றி பெற்றது.

இலக்கை விரட்டிய போது இலங்கை பவுலர் தனஞ்ஜயாவின் 4வது ஓவரில் எவின் லூயிஸ் (28), கிறிஸ் கெயில் (0), நிகோலஸ் பூரன் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இன்னொரு தொடக்க வீரர் லெண்டில் சிம்மன்ஸ் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் விளாசி இன்னொரு டிசில்வாவிடம் ஆட்டமிழக்க மே.இ.தீவுகள் 5 ஓவர்களில் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முந்தைய ஓவரில்தான் ஹாட்ரிக் கைப்பற்றியிருந்தார் அகிலா தனஞ்ஜயா, தனக்கு இப்படி அடுத்த ஓவரில் சாத்துப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

6-வது ஓவரை தனஞ்ஜயா வீச வந்தார். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து பொலார்ட் மிரட்டினார். பவர் ப்ளே முடிவில் 98 ரன்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் நல்ல நிலைமைக்கு வந்த போது டிசில்வா ஓவரில் பொலார்ட் 11 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்து கூக்ளி பந்தில் எல்.பி.ஆனார். ரிவியூ விரயம் ஆனது. அடுத்த பந்தே பேபியன் ஆலன் ஆட்டமிழக்க ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார். ஆனால் டிவைன் பிராவோ தடுத்தாடி விட்டார். பிறகு ஜேசன் ஹோல்டர் 24 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 29 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார் மே.இ.தீவுகள் வென்றது. ஆட்ட நாயகனாக கிரன் பொலார்ட் தேர்வு செய்யப்பட்டார். 6 சிச்கர்களை விளாசி கிரன் பொலார்ட் யுவராஜ் சிங் சாதனையைச் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் உலகக்கோப்பை 2007-ல் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசியதும் நினைவுகூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து