முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் - உதயநிதி சொத்துகள் அதிகரிப்பு - வேட்புமனுக்களில் தகவல்

திங்கட்கிழமை, 15 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் இ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரின் சொத்து விவரம் தெரியவந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களின் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அசையும் சொத்தாக வங்கி கணக்குகளில் 47 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் 4 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் தமக்கு 4 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து 488 ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி விஜயலட்சுமி பெயரில் 10 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரத்து 858 ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மு.க ஸ்டாலினின் சொத்து மதிப்பு 4.94 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 1.17 கோடியாகவும் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டை விட மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூபாய் 3 கோடி அதிகரித்துள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளன. அதேபோல, உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பை விட ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறைவாக உள்ளது. மேலும், ஸ்டாலின் மீது 45 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்பு மனுவில் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

தி.மு.க. சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் அசையும் சொத்து ரூ.22.28 கோடி எனவும், அசையா சொத்து ரூ.6.54 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. மொத்த சொத்து ரூ.28.82 கோடி என்றும் ரூ.1.35 லட்சம் கடன் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவில் தகவல் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து