முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி ராஜ்நிவாஸில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டு சபாநாயகர் தேர்வாகவுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியானது. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்குத் தேர்தல் துறை சான்றிதழ்களை வழங்கியது. அதே நேரத்தில் ரங்கசாமி முதல்வராக கடந்த 7-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளார். 

இதையடுத்து தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணனுக்குத் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் லட்சுமி நாராயணன் பதவியேற்றார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, லட்சுமி நாராயணன் குடும்பத்தினர், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.  

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா நடந்தது. வழக்கமாக சட்டப்பேரவையில்தான் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக சபாநாயகர் அறையில் எளிய முறையில் விழா நடந்தது. முதல் நபராக முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவருக்குத் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியே சபாநாயகர் அறைக்கு வந்து எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கும் போது அவர்களின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 

நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவர் நியமனம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்யக் கூடாது என்று சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களோடு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக்கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பையொட்டி சட்டப்பேரவை வளாகத்துக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் லட்சுமி நாராயணன் கூறுகையில், எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிறைவடைந்துள்ளது. முதல்வர் ரங்கசாமியும், அரசும் தேர்தல் தேதியை அறிவித்து சபாநாயகர் நியமனம் நடைபெறும். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக இத்தேர்வு அனைத்தும் முடிந்து விடும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து