Idhayam Matrimony

நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், நலிந்த நிலையில் வாழும்  கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்,  1000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் அடையாளமாக  11 கலைஞர்களுக்கு  நிதி ஒப்பளிப்பு  ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார். 

இதன்மூலம், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின்  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ், 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் 1000 நலிந்த கலைஞர்கள் பயனடைவார்கள். மேலும், நலிந்த கலைஞர்களுக்கு  வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ரூ.2000/-த்திலிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு  அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 6600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் சந்திரமோகன், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் கலையரசி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் தேவா,  உறுப்பினர் செயலாளர் தங்கவேலு(ஓய்வு) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து