எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அருண்ராஜ் இணைந்துள்ளார். அவருக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.ஆர்.எஸ். அதிகாரியான அருண் ராஜ், இந்திய வருமான வரித்துறையில் பணியாற்றியவர். தமிழகத்தில் பணியாற்றிய அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவரான இவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆனார். 2009 ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரியாக சென்னையில் பணியாற்றினார். தொடர்ந்து பீகாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பாட்னாவில் வருவாய்த்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என திட்டமிட்டு இருந்தார். ஆனால் நேரடியாக அல்லாமல் ஜான் ஆரோக்கியசாமி, மூலம் விஜய்க்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த வாரங்களுக்கு முன்பு திடீரென தனது பதவியை ராஜினாமாஅருண்ராஜ் செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கும் அனுப்பியநிலையில் அந்த ராஜினாமா மத்திய அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைய இருப்பதாகவும் இணை பொது செயலாளர், துணை பொது செயலாளர் ஆகிய பதவிகள் வழங்கப்படலாம் என கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகின இந்த நிலையில் தான், நேற்று சென்னை பனையூரில் த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்த அருண்ராஜ், தவெகவில் இணைந்தார். அருண்ராஜ்ஜுக்கு த.வெ.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


