Idhayam Matrimony

லிசி ஆண்டனி நடிக்கும் குயிலி

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      சினிமா
Kuili 2025-06-09

Source: provided

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட, தயாரிப்பாளர் கே. ராஜன் பெற்றுக் கொண்டார். மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். நடிகை லிசி ஆண்டனி பேசுகையில், இந்தப் படத்திற்கு 'குயிலி' என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் ஒப்புக்கொண்டு விட்டார் என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், மது ஒழிப்பு கொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளைய தலைமுறையினரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து