எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள்
போட்டியின்றி தேர்வாகுகிறார்கள். இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 12-ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகிறது.
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 18 பேரில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதனைத் தொடர்ந்து, புதிதாக 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கடந்த 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல், அ.தி.மு.க. தரப்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். மேலும், சுயேச்சைகள் 7 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 13 பேர் களத்தில் உள்னனர். இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 12-ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும். சுயேச்சையாக மனு செய்துள்ள 7 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படும் என தெரிகிறது. அதன்பிறகு, தேர்தல் களத்தில் 6 பேர் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இருப்பதால், தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேரும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


