Idhayam Matrimony

மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

தானே : ம்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே உறுதி அளித்துள்ளது.  

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அடுத்த தானேவில் புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்து உள்ளது. தற்போது மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மும்பையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பா.ஜ., அரசு தனது 11 ஆண்டுகள் ஆட்சி நிறைவை கொண்டாடும் அதே வேளையில் மும்பையில் இருந்து வரும் துயரச் செய்திகளில் நாட்டின் யதார்த்தம் பிரதிபலிக்கிறது. பலர் ரயிலில் இருந்து விழுந்து இறந்தனர்.

இந்திய ரயில்வே கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் முதுகெலும்பாக உள்ளது. ஆனால் இன்று அது பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: தானேவில் ரயிலில் இருந்து மொத்தம் பயணிகள் 8 பேர் தவறி விழுந்து, அவர்களில் சிலர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினரின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து