தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு: சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

Radhakrishnan 2020 11 16 0

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, 

ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது.

இன்னும் 6 முதல் 8 வாரங்களில் அதை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா கூறியிருந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் பரவல் அச்சமூட்டுவதாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து