எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பிரேசிலியா: இறுதி ஆட்டத்தில் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றி மூலம் மெஸ்யின் கனவும் நனவாகியுள்ளது. அணி கேப்டனாக இருந்து அவர் பெற்றுத் தரும் முதல் கோபா கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் ஆதிக்கம்...
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. பிரேசிலிலுள்ள மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரேசில் ஆக்ரோஷம் காட்டி வந்தது. எனினும், 22-வது நிமிடத்தில் அர்ஜென்டீனா வீரர் ரோட்ரிகோ டி பால் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
அர்ஜென்டீனா...
முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழாததால் அர்ஜென்டீனா 1-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டத்தில் பிரேசில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் முதல் கோலுக்கு கடுமையாக முயற்சித்தார்.
கூடுதல் நேரம்...
எனினும், அர்ஜென்டீனா சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பிரேசில் அணியால் கூடுதல் நேரத்திலும் கோல் அடித்து சமன் செய்ய முடியவில்லை. இதன்மூலம், அர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
15-வது முறை...
கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறை. அர்ஜென்டீனாவுக்கு லயோனல் மெஸ்ஸி பெற்று தரும் முதல் பெரிய சர்வதேச கோப்பை இது.
BOX - 1
தங்க காலணி விருது
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த லயோனல் மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டதில் மெஸ்ஸி எந்த கோலும் போடவில்லை. இருப்பினும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய மெஸ்ஸி அடித்த கோல்களின் மொத்த எண்ணிக்கை 4. இதற்காக அவருக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
0000000000
BOX - 2
மரடோனாவுக்கு அர்ப்பணிப்பு
கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர். கால்பந்தின் ஜாம்பவான் மரடோனா. அவரது தலைமையில் அர்ஜென் டினா 1986-ல் உலக கோப்பையை கைப்பற்றியது.
மரடோனா வழியில் தான் மெஸ்சி உலகின் சிறந்த கால் பந்து வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்த நிலையில் கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
00000000
BOX - 3
நெய்மர் கண்ணீர்
கடைசி விசில் அடிக்கப்பட்டவுடன் மைதான ஸ்க்ரீன் அர்ஜெண்டீனா சாம்பியன், லியோனல் மெஸ்ஸி சாம்பியன் என்று ஒளிர்ந்தது. நெய்மாரினால் கண்ணீரை அடக்க முடியவில்லை மண்டியிட்டு கண்ணீர் விட்டுக் கதறியது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
இந்த வெற்றி அர்ஜெண்டீனாவின் 15வது கோப்பா அமெரிக்கா சாம்பியன் பட்டமாகும். உருகுவேயுடன் சமன் செய்துள்ளது. இந்த வெற்றியுடன் 20 போட்டிகளில் தோற்காமல் ஒரு தொடர்ச்சியை அர்ஜெண்டீனா கடைப்பிடித்து வருகிறது. 2018 உலகக்கோப்பையில் பெல்ஜியமிடம் தோற்று பிரேசில் வெளியேறிய பிறகு ஒரு மேஜர் தோல்வியை அர்ஜெண்டீனா பிரேசிலுக்கு பரிசாக அளித்துள்ளது.
0000000000
BOX - 4
மெஸ்ஸி ஆறுதல்
நெய்மருக்கு மெஸ்ஸி ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில் கேப்டன் நெய்மார் மைதானத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதார். நடுவர் இறுதிவிசில் அடித்ததும் மைதானத்தில் அர்ஜெண்டீனா வீரர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர்.
பிரேசில் வீரர் நெய்மர் , மெஸ்ஸியை நோக்கி வந்தார். மெஸ்ஸி, நெய்மரை ஆரத்தழுவி அவருக்கு ஆறுதல் சொன்னார். அதேநேரத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்த தனது அணி வீரர்களில் முதுகில் தட்டிக்கொடுத்த மெஸ்ஸி. நெய்மரை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சென்னை அணியில் இணையும் லிவிங்ஸ்டன் - தேஷ்பாண்டே..!
14 Nov 2025சென்னை: ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2025.
14 Nov 2025 -
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி: காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி: எடப்பாடி பழனிசாமி
14 Nov 2025சென்னை : காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
குழந்தைகள் தினம்: இ.பி.எஸ். வாழ்த்து
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாமல்லபுரம் அருகே பரபரப்பு: கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்
14 Nov 2025செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
14 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்
14 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில் காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை போலீசார் நா
-
கொல்கத்தா முதல் டெஸ்ட்: பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி
14 Nov 2025கொல்கத்தா: கொல்கத்தா முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது.
-
பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் கட்சி வேட்பாளர்
14 Nov 2025டெல்லி: பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி
14 Nov 2025சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயனுக்கு தி.மு.க. கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
14 Nov 2025திண்டுக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
மியான்மர் கலவரப்படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு
14 Nov 2025சென்னை: மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 4 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
ஆசிய வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
14 Nov 2025டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
-
பீகாரின் ஒரே முதல்வர் நிதிஷ்குமார் தான் : ஆளுங்கட்சியின் பதிவு உடனடி நீக்கம்
14 Nov 2025டெல்லி: பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
-
டெல்லி குண்டுவெடிப்புக்கும் மும்பை தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு..!
14 Nov 2025டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியு
-
மஹுவா சட்டசபை தொகுதியில் லல்லுவின் மூத்த மகன் தோல்வி
14 Nov 2025டெல்லி: மஹுவா தொகுதியில் தொகுதியில் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியடைந்துள்ளார்.
-
தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது
14 Nov 2025சியோல்: தென்கொரிய முன்னாள் பிரதமரை போலீசார் கைது செய்தனர்.
-
பயிற்சியாளராக சவுதி நியமனம்
14 Nov 202519-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். லக்னோ அணியில் ஷமி..?
14 Nov 2025லக்னோ: இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதிப்பு
14 Nov 2025வாஷிங்டன்: இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.
-
புராதன சின்னங்கள் ஆணையம்: தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
14 Nov 2025திருவண்ணாமலை : புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீங்கள் விழாமல் தாங்கிப்பிடித்து கொள்வேன்: குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் ஐ.பி.எல். 2026 மினி ஏலம்
14 Nov 2025மும்பை: அடுத்த மாதம் 16-ம் தேதி அபுதாபியில் வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது. ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் தொடர்ந்து 3-வது முறையாக வெளிநாட்டில் நடக்கிறது
-
ஜம்மு-காஷ்மீர் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சி தோல்வி
14 Nov 2025டெல்லி : ஜம்மு - காஷ்மீர் இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: உமர் நபயின் வீடு தகர்ப்பு
14 Nov 2025காஷ்மீர் : டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட உமரின் வீடு தகர்க்கப்பட்டது.


