கொரோனாவை தடுக்கும் கருவி தடுப்பூசிதான் அதனை போட்டுக்கொள்ள மக்கள் தயங்கக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

Minister-Amit-Shah 2021 07

Source: provided

காந்திநகர்: மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நர்திப்பூர் கிராமத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், அவர் அதலாஜ் பகுதியில் சுவாமி நாராயண் கோவிலால் கட்டப்பட்ட சாரதாமணி சமூதாயக் கூடத்தையும் திறந்து வைத்தார்.

யாருமே காலி வயிற்றுடன் உறங்கச் செல்லக்கூடாது என்ற எண்ணம் கொண்ட கிராமத்துக்கு தான் வருகை புரிந்துள்ளதாகவும், இந்த அமைப்பு மூலம் எந்த உயிரும் பட்டினியுடன் உறங்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார். 

காந்திநகரில் உள்ள 3 ஆயிரம் நபர்களுக்கு மேல் வசிக்கும் கிராமங்கள் அனைத்திலும் 2024 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியை கொண்டுவர தன்னிடம் திட்டம் உள்ளதாக அமித்ஷா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காந்திநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சன் பவுன்டேஷன் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமித்ஷா திறந்து வைத்தார். 

சன் பவுன்டேஷனால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆக்சிஜன் வசதி கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் மக்களுக்கு வலுசேர்க்கிறது என்றும், இதனால் இங்குள்ளவர்கள் நீண்ட காலத்துக்குப் பயன்பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். 

அமித்ஷா கொரோனா தொற்றில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ராஜ்பவனில் விருதுகளை வழங்கி கவுரவித்தார். கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த போரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து போரிட்டுள்ளதாகவும், இதில் ஒவ்வொருவருக்கும் முக்கியப் பங்குள்ளதாகவும் கூறினார். 

பின்னர் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- 

தொற்றுநோய்களின் போது உலகம், இந்தியா மற்றும் குஜராத் ஆகியவை மிகவும் கடினமாக பாதிக்கப்பட்டன . நாம் நிறைய அன்புக்குரியவர்களை இழக்க நேரிட்டது… இரண்டாவது அலையில், வைரஸ் மிக வேகமாக பரவியது, அதை மனிதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் அந்த சூழ்நிலையில் கூட, பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாரத்திற்குள் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு 10 மடங்கு ஆக்ஸிஜன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். 

கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் மிக முக்கியமான கருவியாக தடுப்பூசி உள்ளது . அதனை போட்டுக்கொள்ள மக்கள் தயங்கக்கூடாது. தடுப்பூசிக்கு யாரும் பயப்படக்கூடாது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசிலிருந்து நம்மைக் காப்பாற்றும். இது தான் மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021
இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021 ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை...
Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன் மாட்டுப் பண்ணையை லாபகரமாக நடத்த என்ன செய்ய வேண்டும் |Cow Farming Business Ideas in Tamil | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 22.10.2021
பிக் பாஸ் வீட்டில் கும்மாங்குத்து தொடங்கியது... அபிநய்யை பிறாண்டிய பாவனி... பூனை பால் பாட்டிலை பிடித்து கொண்டு பால் பருகும் க்யூட்டான வீடியோ...! வெஜிடேரியன் உணவு சாப்பிடும் முதலை...!
View all comments

வாசகர் கருத்து