முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பதக்க வேட்டையை தொடங்குமா இந்திய அணி?

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவில் இன்று இந்திய குழுவினருக்கு மிக முக்கிய நாளாக, விளையாட்டு வல்லுநர்கள் பலரும் கருதுகின்றனர். இன்று பதக்கவேட்டையை தொங்க இந்திய அணிக்கு வாய்ப்புள்ள நாளாக கருதுவதே அதற்கு காரணம்.

127 வீரர்கள்...

முந்தைய ஒலிம்பிக் சீசன்களை விட டோக்கியோ திருவிழாவில் இந்தியக் குழுவினரின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. திறமை மிகுந்த 127 வீரர் வீராங்கனைகளுடன் சென்றுள்ள இந்தியக்குழு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை வசப்படுத்துவர் என்ற நம்பிக்கை ஒளி வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜூலை 24-ஆம் தேதி டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு போட்டிகள்...

காரணம் அன்றைய தினம் இந்தியாவின் முன்னனி ஒலிம்பிக் நட்சத்திரங்கள் பதக்கங்களை தீர்மானிக்கும் பல்வேறு போட்டிகளில் களமிறங்கவுள்ளனர். பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் மிரா பாய் சானு, வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அட்டனு தாஸ் மற்றும் தீபிகா குமாரி, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவ்ரப் திவாரி, அபிஷேக் வர்மா, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். 

18 பிரிவுகளில்... 

மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல், பேட்மிண்டன் என 18 பிரிவுகளில் இந்திய அணி வரும் நாட்களில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஜூலை 24-ம் தேதியான இன்று நடைபெறும் போட்டிகளில் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் 2 பதக்கங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக விளையாட்டு வல்லுநர்கள் பலரும் கணித்துள்ளனர். அது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து