முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது: ஆக. 15-ல் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

புதன்கிழமை, 28 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தகைசால் தமிழர் விருதிற்கு முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது அவருக்கு முதல்வர் ஸ்டாலின் விருதினை வழங்குகிறார். 

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் முதல்வர்  மு.க. ஸ்டாலின் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.  

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே  பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.  

தகைசால் தமிழர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும். 

இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் 10 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கே வழங்குவதாக சங்கரய்யா அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து