Idhayam Matrimony

கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜே.டி.யு. வேட்பாளர் அமோக வெற்றி

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      இந்தியா
Anand-Singh 2025-11-14

Source: provided

டெல்லி: பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறையில் உள்ள ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் குமார் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 4 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில், 5 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அதேவேளை, மகாகத்பந்தன் கூட்டணி 27 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான அனந்த் சிங் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.

மொகாமா தொகுதியில் 26 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அனந்த் குமார் சிங் 91,416 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வீணா தேவி 63,210 வாக்குகளும் பெற்றனர். முன்னதாக, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் துலர்சந்த் யாதவ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான அனந்த் குமார் சிங்கை பாட்னா காவல் துறை அதிகாரிகள் நவ. 1 ஆம் தேதி இரவு கைது செய்தனர். 

தற்போது அனந்த் குமார் சிங் நீதிமன்றக் காவலில் உள்ளார். பீகாரில் பிரபல தாதாவான அனந்த் சிங், ராஷ்ரிடிய ஜனதா தளத்தில் இருந்து பின், ஐக்கிய தனதா தளத்தில் இணைந்து எம்.எல்.ஏ.வானார். அனந்த் சிங்கின் மனைவி நீலம் தேவி தற்போது மொகாமா எம்.எல்.ஏவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து