முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் வரும் 9-ம் தேதி முதல் தொடக்கம்: தமிழக அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

2021 - 22ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி முதல் தவறாமல் பணிக்கு வரவேண்டும் என்று உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள், பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டன. முன்னதாகக் கடந்த மாதத்தில் கொரோனா நோய்ப் பரவல் தணிந்த நிலையில் கல்லூரிகளைத் திறப்பது தொடர்பாக உயர் கல்வித்துறை ஆலோசனை செய்தது. கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மீண்டும் மெதுவாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 18-ம் தேதி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

டிசம்பர் 2-ம் தேதி செய்முறைத் தேர்வும், டிசம்பர் 13-ம் தேதி பருவத் தேர்வும் நடைபெற உள்ளது. அதேபோல எம்.சி.ஏ, எம்.எஸ்.சி, எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும் வரும் .18-ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கப்படுவதை ஒட்டி, அனைத்துப் பேராசிரியர்களும் கல்லூரிகளுக்குத் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து உயர் கல்வித்துறைச் செயலர் கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, 

2021 - 22ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளும் கொரோனா விதிகளையும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்லூரிகளின் பேராசிரியர்கள் அனைத்து வேலை நாட்களிலும் தவறாமல் கல்லூரிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து