முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நயினார் தலைமையில் நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு: தமிழக பா.ஜ.க.

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      தமிழகம்
BJP 2025-08-20

Source: provided

சென்னை : நயினார் தலைமையில் நாளை நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு நடப்பதாக தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் மகத்தான வெற்றி பெறும் சூழ்நிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி பா.ஜ.க. மாநாடு உருவாக்கும் என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு லட்சம் பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் முதல் கட்டமாக, ஒரு லட்சம் பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள், வீரத்தின் விளைநிலம் திருச்செந்தூர் முருகனின் ஆட்சி ஸ்தலம் திருநெல்வேலியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தேர்தல் பயிற்சி பெற்று ஆன்மிக அரசியல் ஆட்சி நடப்பதற்கு அடித்தளம் அமைக்கின்றனர்.

பா.ஜ.க.வின் மாநில அளவிலான முதல் பூத் கமிட்டி கமிட்டி மண்டல மாநாடு திருநெல்வேலியில் நாளை மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது. நெல்லை உள்பட 5 மக்களவை தொகுதிகள், 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு பூத் கமிட்டி மாநாடு நடக்கிறது. தென் மாவட்டங்களில் நெல்லை உள்பட ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட, 28 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, 8,595 பூத் கமிட்டிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர்.

முதல் பூத் கமிட்டி மாநாடு நடக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், தொடர்ந்து பணியாற்றி வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழக மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியோடு மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு பிரதமருக்கும் நன்றி சொல்லக் கூடிய வகையில், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமிழகத்தின் மகிழ்ச்சிக்காக அரும்பாடு பட்டு வந்த மகராஷ்டிரா மாநில கவர்னர் சி பி ராதாகிருஷ்ணனை இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்து தமிழக மக்களின் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்திய பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து