முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைக்கோ வில்லனாக அஜ்மல்

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் நெற்றிக்கண். இத்திரைப்படத்தில்  சைக்கோ வில்லனாக அஜ்மல் அதகளப்படுத்தியிருக்கிறார். ட்ரெயலரிலேயே அவரது நடிப்பு பெரும் பாராட்டுக்களை குவித்து வருவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். 

"நெற்றிக்கண்"  திரைப்பட அனுபவம் குறித்து அவர் கூறியதாவது...  கோ படத்திற்கு பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தது. ஆனால் இடையில் தனது மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதால் எந்த வாய்ப்புகளையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப, நெற்றிக்கண் மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்ததுள்ளது.

இரண்டு கதாப்பாத்திரங்களின் ஆடு புலி ஆட்டம் தான் மொத்தப்படமுமே என்பதால் எனது பாத்திரம் இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ஆங்கில 'ஜோக்கர்' பட பாத்திரத்தை போன்றது தான் இப்படத்தில் என்னுடைய பாத்திரம். சைக்கோ வில்லனாக இருந்தாலும் தனித்து தெரியும் பாத்திரமாக இருக்கும். 

ரசிகர்கள் கண்டிப்பாக எனது கதாப்பாத்திரத்தை ரசிப்பார்கள் என்றார். நாயகி நயன்தாரா, கேமராமேன் RD ராஜ சேகர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், இயக்குநர் மிலிந்த் ராவ் என இந்த கூட்டணியே மிகப்பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தும் கூட்டணி என்று கூறிய அஜ்மல்,  இந்தப்படம் இதுவரை வந்த தமிழ் திரில்லர்களை, மிஞ்சும் படைப்பாக இருக்கும் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து