Idhayam Matrimony

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

புதன்கிழமை, 28 மே 2025      தமிழகம்      அரசியல்
DMK-Mps-2025-05-28

சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் ம.நீ.ம.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.

வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடக்கிறது. இந்தநிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளர்களாக 1. பி.வில்சன் பி.எஸ்சி, பி.எல்., 2. எஸ்.ஆர்.சிவலிங்கம், 3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் ம.நீ.ம.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து