Idhayam Matrimony

ஏவப்பட்ட 30 நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்

புதன்கிழமை, 28 மே 2025      உலகம்
SpaceX-2025-05-28

டெக்சாஸ், ஏவப்பட்ட 30 நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவருடைய ஸ்பேஸ்எக்ஸ் என்ற பெயரிலான வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு ஏவி சோதனை செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் நேற்று காலை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களில் அந்த விண்கலம் இலக்கை எட்டுவதற்கு பதிலாக வெடித்து சிதறியது. இதுபற்றி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், 403 அடி (123 மீட்டர்) உயரம் கொண்ட அந்த விண்கலம், கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்பு, கடந்த 2 முறை தோல்வியடைந்த புள்ளியை கடந்து சென்றது. எனினும், அது வெடித்து சிதறியுள்ளது. 

இதுபோன்ற பரிசோதனையில், நாம் என்ன கற்று கொள்கிறோம் என்பதிலேயே வெற்றி வருகிறது. இன்றைய பரிசோதனையானது, ஸ்டார்ஷிப்பின் நம்பக தன்மையை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில், பல்வேறு கோள்களிலும் மனிதர்களின் வாழ்க்கையை உருவாக்கும் நோக்கில் ஸ்பேஸ்எக்ஸ் செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சமீபத்திய விண்கல ஏவுதலுக்கு முன்பு, எட்டு முறை விண்கல ஏவுதல் முயற்சி நடந்துள்ளது. இதில் 4 வெற்றிகள் கிடைத்துள்ளன. 4 முறை தோல்வி கண்டு அவை வெடித்து சிதறியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து