Idhayam Matrimony

மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவு மீட்பு ஒரே வழி: திருவொற்றியூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 28 மே 2025      தமிழகம்
CM-1-2025-05-28

சென்னை, தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவை மீட்புதான் ஒரே வழி என்று திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நெரிசல் அதிகமானதையடுத்து கில்நெட் வலை மூலம் பிடிக்கப்படும் சூரை வகை மீன்பிடிக்கும் விசைப் படகுகளைக் கையாள்வதற்கான பிரத்யேக மீன்பிடித்துறைமுகம் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய மீன்பிடித் துறைமுகத்தைத் திறந்து வைத்து, 2,000 மீனவர்களுக்கு ரூ. 242 கோடியில் நுண்கடன், பாக் நீரிணைப்பு மீனவர்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் ராமநாதபுரம் தங்கச்சிமடம், ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மீன் இறங்கு தளங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சூரை மீன்பிடித் துறைமுகம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வழங்கும் தொகை ரூ. 8 லட்சமாக உயர்த்தப்படும். புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. நாம் எடுத்த நடவடிக்கைகளால் இதுவரை 1,154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்பட்டனர்.  அரசு மீன் பண்ணைகளை மேம்படுத்த ரூ. 46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1 லட்சத்து 20 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.1528 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.  படகுகள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது. மீனவர்களுக்கான அதிக திட்டங்களை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு.  மீனவர்களுக்காக இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரிக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளேன். 

தொடர் வலியுறுத்தல் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 23 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி. மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால்தான் கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவோற்றியுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து