Idhayam Matrimony

ஒரே போட்டியில் 3 வரலாற்று சாதனைகள் படைத்த கோலி

புதன்கிழமை, 28 மே 2025      விளையாட்டு
Virat-Kohli-2025-04-20

லக்னோ, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார்.  பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்தது. 

கடைசி லீக் ...

ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ரிஷப் பண்ட் சதம்

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

அதிக அரைசதம் ...

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். வார்னர் 62 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில் கோலி 63 அரைசதங்களை அடித்துள்ளார்.

முதல் வீரர் ...

மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக 9000 ரன்களை கடந்த முதல் வீரர் , ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

டி20-யில் ஒரே அணிக்காக அதிக ரன்கள்:

1) 9030 - விராட் கோலி (பெங்களூரு).

2) 6060 - ரோகித் சர்மா (மும்பை).

3) 5934 - ஜேம்ஸ் வின்ஸ் (ஹாம்ப்ஷயர்).

4) 5528 - சுரேஷ் ரெய்னா (சென்னை).

5) 5314 - எம்.எஸ். தோனி (சென்னை).

ஒரு சீசனில் 600+ ரன்கள்:

1) 5 - விராட் கோலி (2013, 2016, 2023, 2024, 2025).

2) 4 - கே.எல். ராகுல் (2018, 2020, 2021, 2022).

3) 3 - கிறிஸ் கெய்ல் (2011, 2012, 2013).

 

4) 3 - டேவிட் வார்னர் (2016, 2017, 2019).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து