முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்புப்படை நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

பாதுகாப்புப்படை நிரந்தர ஆணையத்திற்கு பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்புப்படை நிரந்தர ஆணையத்திற்கு தகுதியான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. 

இது தொடர்பான வழக்குகளை கடந்த வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற செயல்களில் பாலின பாகுபாடு கூடாது என்றும் பெண்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்புப்படையின் நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்புப்படை நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. 

இந்த விளக்கத்தை வரவேற்பதாக நீதிபதி எஸ்.கே.கவுல்  தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், செப்டம்பர் 22-ம் தேதி இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து