எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்குச் சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். மரியாதையோடு அதே பதவியைக் கொடுத்தால் வந்துவிடுவதாக கூறியுள்ளார்கள். அ.தி.மு.க.வில் கிடைக்கும் மரியாதை வேறு எந்தக் கட்சியிலும் கிடைக்காது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூநடைபெற்ற அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உரையாற்றினார். கரூரில் 41 பேர் உயிரிழந்தார்கள், அவர்களைப் பார்க்காமல் சென்னை சென்றவர் திரும்பி வரவே இல்லை. என்னவாக இருந்தாலும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் விஜய் என்னுடைய நண்பர். ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக எனது வீட்டுக்கு வந்தார். எனது காரில் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நான்தான் உதவினேன். ஆனால் மக்களுக்கு தலைவன் எனச் சொல்லிக் கொண்டு வரும்போது அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்குச் சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். மரியாதையோடு அதே பதவியைக் கொடுத்தால் வந்துவிடுவதாக கூறியுள்ளார்கள். அ.தி.மு.க.வில் கிடைக்கும் மரியாதை வேறு எந்தக் கட்சியிலும் கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் த.வெ.க.வில் இணைந்தனர். தற்போது த.வெ.க.வின் நிர்வாகப் பொதுச் செயலாளராகவும் செங்கோட்டையன் பதவி வகித்து வருகிறார். மேலும், சமீபத்தில் வடசென்னையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வி.எஸ். பாபு, அ.தி.மு.க. மூத்த தலைவர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


