ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கி ஒத்திகை

rajasthan-air-force-2021-09

ராஜஸ்தானில், போர் விமானங்கள் பார்மர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன.

முதலாவதாக விமானப்படைக்கு சொந்தமான சி 130 ஜே சூப்பர் ஹெரகுல்ஸ் விமானம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, விமானப்படை தளபதி பதுரியா ஆகியோருடன் தரையிறங்கியது.

இதனை தொடர்ந்து ஜகுவார், சுகோயச் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் தரையிறங்கியதுடன் அங்கிருந்து கிளம்பி சென்றன. அவசர காலங்களில், விமானத்தின் ஓடுபாதையாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக, நெடுஞ்சாலைகளின் தரத்தை சோதித்து பார்க்கும் வகையில், இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. போர் விமானங்கள், தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கும் நிகழ்ச்சியை முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பார்வையிட்டார்.

ஆக்ரா - லக்னோ தேசிய நெடுஞ்சாலை உட்பட நாடு முழுவதும் 12 தேசிய நெடுஞ்சாலைகள், அவசர காலங்களின் விமான ஓடுப்பாதையாக பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

அனைவருக்கும் பாராட்டுகள். சாலைகளில், வழக்கமாக கார்கள் மற்றும் டிரக்குகளைத்தான் பார்க்க முடியும். தற்போது விமானங்களை பார்க்க முடிகிறது. இந்த இடம் முக்கியமானது. கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரை இந்த பகுதி எதிர்கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து