லாபம் - விமர்சனம்

Vijay-Sethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் மறைந்த எஸ். பி. ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் லாபம். படத்திற்கு இசை டி.இமான். 7 வருடத்திற்கு முன் ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட பக்கிரியாகிய விஜய் சேதுபதி பல இடங்கள் சுற்றி திரிந்து மீண்டும் தனது ஊருக்கு திரும்புகிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து தரிசு நிலங்களில் விவசாயம் செய்து விவசாய நிலமாக மாற்றுகிறார். அவருக்கு நாடக கலைஞரான ஸ்ருதிஹாசன் உதவுகிறார். ஆனால், இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஊரின் முன்னாள் தலைவரான ஜெகபதி பாபு சேதுபதியின் செல்வாக்கை ஒரே நொடியில் சரித்து விட, அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை. விஜய் சேதுபதி வழக்கம் போல தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். கலையரசன், ரமேஷ் திலக், ப்ரித்வி பாண்டியராஜன் ஆகியோர் விஜய் சேதுபதியின் நண்பர்களாக நடித்துள்ளனர். படத்தில் கருத்துக்கள் சிறப்பாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை கொஞ்சம் அலுப்பு தருகிறது. மொத்தத்தில் லாபம் படம் கிடைத்தது வரை லாபமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து