முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 15-ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 15-ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாநகராட்சி 61-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காவேரி நகர் பகுதியில் 2020 மற்றும் 21-வது நிதி ஆண்டில் தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

 தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.  அவரது கோரிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 

இந்த நீட் தேர்வு தமிழகத்தில் கடைசி நீட் தேர்வாக இருக்குமா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழக முதல்வருக்கும் உள்ளது.

தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 15-ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தந்த பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து