ஆனைமடுவு நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

tamilnadu-govt-31-06-2021

Source: provided

சென்னை : ஆனைமடுவு நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து அணை கால்வாய்  பாசனப் பகுதிகளிலும், ஆற்று பாசனப்  பகுதிகளிலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும், ஆற்று பாசனப்  பகுதிகளுக்கு  இன்று 15.09.2021  முதல்   12   நாட்களுக்கு   62.16 மில்லியன் கன அடிக்கு  மிகாமலும்,  27.09.2021 அன்று  முதல் வலதுபுறக் கால்வாய் பகுதி மற்றும்  இடதுபுறக்  கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு  9  நாட்களுக்கு மொத்தம் 38.88  மில்லியன் கன அடிக்கு மிகாமலும்,  சிறப்பு நனைப்பாக  தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் புழுதிக்குட்டை, குறிச்சி, சின்னம்மநாயக்கன்பாளையம், கோலாத்து கோம்பை, நீர்முள்ளிக் குட்டை மற்றும் சந்திரப்பிள்ளை வலசு  கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து