எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர வழிபாட்டிற்காக நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக 7 மாதங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தனர்.
வருகின்ற 21-ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெற உள்ளன. வழிபட விரும்பும் பக்தர்கள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையின் கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது தடுப்பூசிகளின் இரு தவணையும் செலுத்தி கொண்டதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |