ஆரஞ்சு எச்சரிக்கை எதிரொலி: டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது

delhi-Rain 2021-09-16

டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.

டெல்லியில் மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு  மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி, டெல்லியின் வடக்கு, மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு டெல்லி, சோனிபட், ரோத்தக், பிவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மித அளவிலானது முதல் தீவிர கனமழை பெய்யும்.  மணிக்கு 20 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

டெல்லியின் மத்திய, புதுடெல்லி, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு டெல்லி சம்பல், மொராதாபாத், பாக்பத், கண்டிலா, கர்முக்தேஷ்வர் (உத்தர பிரதேசம்) உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை பலத்த மழை பெய்தது.  டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 மணிநேரத்திற்கும் கூடுதலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு  மையம் சார்பில் அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து