10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 20-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: அசாம் முதல்வர் அறிவிப்பு

himanta-biswas-2021-09-16

அசாமில் வருகிற 20-ந் தேதி முதல் அனைத்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என முதல் மந்திரி கூறியுள்ளார்.

அசாமில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன.  இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா 2-வது அலையின் பாதிப்புகள் குறைய தொடங்கிய சூழலில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, அசாமில் வருகிற 20-ந் தேதி முதல் அனைத்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும்.

 

இதற்காக பள்ளி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் முழு அளவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து