முக்கிய செய்திகள்

மியான்மரில் வீட்டுச் சிறையில் உள்ள ஆங் சான் சூச்சி மீதான வழக்கு விசாரணை அக்.-ல் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      உலகம்
Aung-San-suu-kyi-2021-09-17

மியான்மரில் வீட்டுச் சிறையில் உள்ள தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி மீதான வழக்குகளில் விசாரணை வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளதாக அந்நாட்டின் ஜூன்டா (மியான்மர் நீதிமன்றம்) தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறியது, சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தது, தேசவிரோதப் பேச்சு, ஊழல் என 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.

இவை நிரூபணமானால் ஒவ்வொன்றுக்கும் 15 ஆண்டுகள் வீதம் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 76 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி, இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாளின் மீதிப் பகுதியை சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில் ஆங் சான் சூச்சி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களால் அங்கு இதுவரை 1100 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 8000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து