முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அணியின் கேப்டனாக aதொடர்கிறார் ரிஷாப் பண்ட் !

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ரிஷாப் பண்ட் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு...

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடந்து வந்த நிலையில் அணிக்குள் கொரோனா ஊடுருவியதால் பாதியில் நிறுத்தப்பட்டது. 4 மாதங்கள் கழித்து எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர்... 

இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக முதலில் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்தியாவில் ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே தோள்பட்டை காயத்தில் சிக்கியதால் ஐ.பி.எல்.-ல் இருந்து விலகினார். அதன் பிறகு காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட அவர் ஓய்வில் இருந்தார். அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். முதல் 8 ஆட்டங்களில் அந்த அணி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2-வது கட்ட ஐ.பி.எல்.-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 22-ந் தேதி ஐதராபாத் சன்ரைசர்சை சந்திக்கிறது.

இதற்கிடையே, ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்டதால் கிடைத்த 4 மாத காலஅவகாசத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணியுடன் இணைந்து விட்டார். அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் யார் ? என்பதில் குழப்பம் நிலவியது. இந்த நிலையில் ஐ.பி.எல். 2-ம் கட்ட சீசனிலும் ரிஷாப் பண்டே கேப்டனாக தொடருவார் என்று டெல்லி அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்து தெளிவுப்படுத்தியுள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பேட்ஸ்மேனாக அணியில் அங்கம் வகிப்பார்.

சிறப்பாக தொடங்க... 

இதற்கிடையே டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். முதல் பாதியில் நாம் எப்படி செயல்பட்டோம் என்பது முக்கியமல்ல. 4 மாதங்களுக்கு முன்பு உண்மையிலேயே நன்றாக ஆடினோம். இதே போல் மீண்டும் சிறப்பாக தொடங்க வேண்டும். பயிற்சி முகாமில் வீரர்கள் தீவிர உத்வேகத்துடன் இருப்பதை பார்க்க முடிகிறது.

 

ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சியின் போது அவரிடம் நிறைய பேசினேன். மீண்டும் களம் இறங்கி, நிறைய ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடிதர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்முடன் இருக்கிறார். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரது வருகை அணிக்கு பலமாகும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து