முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடுக்கியில் சிறிய விமான நிலையம் நவம்பரில் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

இடுக்கி: இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறில் ரூ. 13 கோடியில் சிறிய விமானங்கள் இறங்கும் வகையில் விமான நிலையத்தை என்.சி.சி. அதிகாரிகள் அமைத்துள்ளனர். இது  நவம்பரில் திறக்கப்படுகிறது.

சுற்றுலா வருவாயை நம்பியே இடுக்கி மாவட்டம் உள்ளது. இங்குள்ள தேக்கடி, மூணாறு பல சுற்றுலா தலங்களுக்கு உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரும்பாலும் எர்ணாகுளம், கோட்டயம், மதுரை வரை விமானம் அல்லது ரயிலில் வருகின்றனர். பின் ரோடு மார்க்கமாகவே இங்கு வர முடியும். 

2017-ல் தேசிய மாணவர் படை சார்பில் இங்கு மாணவர்களுக்கு பறக்கும் பயிற்சியளிப்பதற்காக சிறிய ரக விமானங்களை கையாளும் வகையில் வண்டிப்பெரியாறு அருகில் சத்திரம் என்ற இடத்தில் 12 ஏக்கரில் ரூ. 13 கோடியில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. என்.சி.சி., படைப்பிரிவு அமைத்த முதல் சிறிய விமான நிலையம் இது. முதன்முதலாக பொதுப்பணித்துறை மூலம் விமான நிலைய கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயிரம் மீ., நீள ரன்வேயில் தற்போது 650 மீ.,நீளத்திற்கு பணிகள் முடிந்துள்ளன. நவம்பரில் திறக்கப்படுகிறது.

2 பேர் பயணிக்கும் வைரஸ் எஸ்.டபிள்யூ. 80 ரக சிறிய விமானங்கள் முதலில் தரையிறங்க உள்ளன. அடுத்த கட்டமாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அனுமதி பெற்று தேவையான மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.இடுக்கி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுலா மேம்பாட்டிற்கும், சபரிமலை கோவிலிற்கு முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லவும் இந்த விமான நிலையம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து