எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
நவராத்திரி விழா இன்று முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) செய்தி தொடர்பாளர் ராஜ் நாயர் கூறியதாவது:- கர்பா நடன நிகழ்ச்சி மட்டும் அல்ல. இது கடவுளை மகிழ்விக்கும் வழிபாட்டு நிகழ்ச்சி. முஸ்லிம்களுக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இந்து சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கர்பா நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். நடன நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பெயரை ஆதார் அட்டையில் சரிபார்த்து, அவர்கள் நெற்றியில் திலகமிட்டு பூஜைகள் செய்தபின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வி.எச்.பி. அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தலைவர் விஜய் வடேட்டிவர் கூறுகையில், ‘‘சமூகத்தில் தீயை மூட்டி, சமூகத்தை மதரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் அடைய வி.எச்.பி. விரும்புகிறது. வி.எச்.பி. கூறுவது புதிதல்ல. நாட்டை நிலைக்குலைய வைக்கும் நோக்கத்தில்தான் இந்த அமைப்பே பிறந்தது. வி.எச்.பி..யின் நிலைப்பாடு, நாட்டின் அடித்தளமான வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தகர்க்கிறது. அரசின் நிலைப்பாடும் இதுதான்’’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


