Idhayam Matrimony

நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2025      தமிழகம்
SV-Shekhar 2023-08-28

Source: provided

சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் எஸ்.வி சேகர். முன்னதாக இவரது வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அவரது வீட்டில் எந்த வித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனவே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தற்போது எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் எஸ்.வி.சேகர் வீட்டில் சோதனை நடத்தினர்.  ஒரே வாரத்தில் இரண்டு முறை நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து