எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சியின் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 லட்சம் பொதுமக்கள் பயன்பெறப் போகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்குவோம் என்று சொன்னோம் அதை செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கத்தில் 66 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம். செம்பரம்பாக்கத்தில் இருந்து, சென்னை மாநகருக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தேன்.
இதனால், சென்னையின் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சியின் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறப் போகின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


