முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2025      தமிழகம்
Sunthares 2025-09-21

Source: provided

சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் சூடினார்.

சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 62ம் ஆண்டு விழா உயர்நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, "எந்த சமுதாயத்தில் பெண்களின் நிலைப்பாடு உயர்ந்திருக்கிறதோ அந்த சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயம். அந்த வகையில் தமிழ் சமுதாயம் பெண்கள் சார்ந்த வளர்ந்த, உயர்ந்த சமுதாயம். பெண்களுக்கு இயற்கையாகவே வாதாடும் திறமை உண்டு. அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது என்பதை வீட்டிலேயே தினமும் அனுபவித்து வருகிறோம்.

அந்தக் காலத்திலேயே பெண்கள் கல்வியிலும். செல்வத்திலும் ஆண்களுக்கு சமீமாக. பிரதானமாக திகழ்ந்துள்ளனர். அதனால் தான் நீதித் துறையிலும் நீதி தேவதை, நீதித்தாய் என புகழாரம் சூடுகிறோம். அதேபோல தவறைச் சுட்டிக்காட்டும் போர்க் குணமும் பெண்களுக்கு உண்டு. பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் பல் வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இது மாறுகின்ற கால கட்டம். அதற்கேற்ப நம்மை நாமே தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து