முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க., கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் மத்திய  அரசு செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். 

வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும் கோஷமிட்டனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க இளைஞரணி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ , சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா , டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் எம்.பி. கனிமொழி மற்றும் அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் எம்.பி. திருமாவளவன் உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கனி மொழி எம்.பி. கூறியதாவது;-

கொரோனா காலத்தில் விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளதுவிவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என கூறினார்.

அதேபோல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து