முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலுக்கு வரும் எண்ணம் : இல்லை: நடிகர் சோனு சூட்

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை :  அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்  தெரிவித்துள்ளார்.

பிரபல இந்திப்பட வில்லன் நடிகர் சோனுசூட். இவர் இந்தியில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், சந்திரமுகி, ஒஸ்தி, தேவி போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சோனுசூட், ஒரு தொண்டு அறக்கட்டளையை தொடங்கினார். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அதன்மூலம் உதவிகள் செய்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் போய்ச்சேர ஏற்பாடு செய்தார். இதுபோன்ற நல்ல செயல்களால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.

இந்தநிலையில், நடிகர் சோனுசூட் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக ரியல் எஸ்டேட் சொத்து ஆவணங்கள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், கடந்த 15-ம் தேதி சோனுசூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை தொடங்கியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குர்கான் ஆகிய நகரங்களில் 28 கட்டிடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நான்கு நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது.வருமான வரி சோதனையில் ரூ. 20 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக நடிகர் சோனு சூட் அரசியலில் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.  இந்த நிலையில் ராஜ்யசபை எம்.பி. ஆகும் வாய்ப்பை இரண்டு முறை நிராகரித்ததாகவும், அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் பிரபல பாலிவுட் ஸ்டார் சோனு சூட்  தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், தம்மை ராஜ்யசபை எம்.பி. ஆக்குவதாக இரண்டு அரசியல் கட்சிகள் முன்வந்தன என்று தெரிவித்துள்ள அவர், அரசியலுக்கு வர நினைத்தால் அதை ஊரறிய அறிவிப்பேன் என சோனு சூட் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து