முக்கிய செய்திகள்

நல்லா நடனம் ஆடுறீங்க: கிரண் ரிஜிஜூவுக்கு பிரதமர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 1 அக்டோபர் 2021      இந்தியா
modi-2021-09-04

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அருணாச்சல பிரதேசத்துக்கு பயணம் சென்றிருந்தபோது, உள்ளூர் மக்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

காஸாலாங் கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிட மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சென்றிருந்தார். அப்போது அங்கு வசிக்கும் மக்கள் நடனமாடி அவரை உற்சாகப்படுத்த அவரும் நடனமாடி அவர்களை மகிழ்வித்தார். இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றாக நடனமாடுகிறார், அருணாச்சல பிரதேசத்தின் கலாசாரத்தை காண்பது மகிழ்ச்சியாக உள்ளதென தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து