முக்கிய செய்திகள்

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      இந்தியா
Punjab-farmers 2021 10 03

Source: provided

புதுடெல்லி : பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கனமழை பெய்ததால், இம்மாநிலங்களில் காரிப் பருவ தானியங்கள், நெல், சிறுதானியங்களை கொள்முதல் செய்யும் தேதியை வரும் 11-ம் தேதிக்கு ஒன்றிய அரசுதிடீரென ஒத்திவைத்தது. இதனால், அறுவடை செய்யப்பட்ட தானியங்கள், நெல் நாசமாகும் சூழ்நிலை உருவானது.  மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, இம்மாநில விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்துள்ள மத்திய அரசு, இன்று (நேற்று ) முதலே நெல் கொள்முதலை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி,  குறைந்தப்பட்ச ஆதரவு விலை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இம்மாநில விவசாயிகளும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

* மழைக் காலங்களில் நெல்லின் ஈரப்பதம்  அதிகமாகி எடை கூடும் என்பதால், கொள்முதலை மத்திய அரசு நிறுத்தியது.

* இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலங்களாக பஞ்சாப், அரியானா உள்ளன.

* நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 15 சதவீதம் இம்மாநிலங்களில் விளைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து