முக்கிய செய்திகள்

லக்கிம்பூர் வன்முறை: விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Lakhimpur 2021 10 04

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை தொடர்பான 4-ம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கறுப்புக் கொடி காட்ட வந்க விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் கார் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைக்கு தீர்வு காணும் விதமாக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மாவட்ட நிர்வாகத்துடன் நடத்திய 4-ம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

 

கார் மோதிய சம்பவத்தில் விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எட்டு பேர் உயிரிழப்பைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தரப்பு, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்வது, அவரது மகனை கைது செய்வது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசு வேலை வழங்குவது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், லக்கிம்பூர் மாவட்டம் பதற்றத்துடன் காணப்படுகிறது. அங்கு பெருமளவில் காவல்துறையினரும், மத்திய துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து